தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சிலருக்கு ஆசையாகவும் பலருக்கு பேராசையாகவும் இருக்கிறது. தென் இந்தியாவிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அந்த வகையில், இன்றைய தங்க விலையின் நிலவரத்தைப் பற்றி காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 4,705 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 37,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று கிராம் ஒன்றிற்கு 5 ருபாய் குறைந்து 4,700 ரூபாயாகவும், சவரன் ஒன்றிற்கு 40 குறைந்து 37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.1 அதிகரித்து 61.8 ரூபாய்க்கும், கிலோ ஒன்றுக்கு 1,100 ருபாய் அதிகரித்து 61,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.