துமகூரு : தொடர் மழையால், பாவகடாவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் மழை நீர் சூழ்ந்தது. ஆபத்தை உணராத இளைஞர்கள் சிலர், தேங்கிய நீரில் நீச்சடித்தனர்.
துமகூரு பாவகடாவின் வல்லுார் – கடகனாகரே கிராமத்துக்கு இடையே, 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
இதன் மூலம் தினமும், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், இப்பகுதியில் மழை நீர் தேங்கியது.
இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள், ஆபத்தை உணராமல் நீச்சல் அடித்து விளையாடிகொண்டிருந்தனர்.
ஆனால், நிர்வாக அதிகாரிகளோ இதை கண்டும் காணாமல் இருந்தனர். அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement