ஹொபெர்ட்,
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்
வெஸ்ட் இண்டீஸ்: கைய்ல் மேயர்ஸ், ஜான்சன் ஜார்லஸ், இயன் லிவிஸ், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரவ்மென் பவுல், ஜேசன் ஹொல்டர், அகில் ஹொசின், ஒடின் ஸ்மித், அல்சாரி ஜோசப், அபெட் மெகொய்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், அண்டிரு பெல்பிரினி (கேப்டன்), லார்கன் டிரக்கர், ஹரி டிக்டர், ஷப்கர், ஜார்க் டெக்ரில், ஹரித் டெலினி, மார்க் அடிர், பெரி மெக்ஹர்தி, ஜோஷ்வா லிட்டில்.