இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது. அருணாச்சலப்பிரதேசம்: அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இன்று காலை 10.43 மணி அளவில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் யார் பயணித்துள்ளார்கள், யாருக்கேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்தான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவு வரை சாலை வசதி கிடையாது. மலைப்பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளதால் மீட்புப்பணிகளை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்தான விவரங்களை, ராணுவம் கூடிய விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.