இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை


இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல்.

ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு.

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இருப்பினும் அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 6ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் குறித்து அரச குடும்ப வட்டாரங்கள் அதிக கவலை கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை | Prince Harry Memoir Big Trouble For King Charles

பெயர் குறிப்பிடாத ஆதாரம் தி டெய்லி பீஸ்டிடம் தெரிவித்த தகவலில், புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒற்றை அத்தியாயம் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ராயல் இன்சைடர் தி டெய்லி பீஸ்டிடம் தெரிவித்த தகவலில், குறிப்பிட்ட அத்தியாயம் ஒன்று மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது, இருப்பினும் அந்த அத்தியாயத்தில் என்னென்ன வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதைப்போன்றே அரண்மனையும் தி டெய்லி பீஸ்டிடம் புத்தகத்தைப் பற்றிய கூற்றுகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கவில்லை மேலும் ஹரியின் கையெழுத்துப் பிரதியை ராஜாவின் அலுவலகம் பார்வையிட்டதா என்ற தகவலையும் கூற மறுத்துவிட்டனர்.

இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை | Prince Harry Memoir Big Trouble For King Charles

மேலும் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு; போரிஸ் ஜான்சன் பக்கம் சாயும் முக்கிய அமைச்சர்: பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

ஏற்கனவே நெட்ஃபிக்ஸ் தளத்தின் “தி கரவுன் தொடர்” பல்வேறு எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருவதாக சலசலப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது இளவரசர் ஹரியின் புத்தகமும் அரண்மனையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.