டெல்லி: மன்னார் வளைகுடா பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை நிறுத்தக் கூறினோம். படகு நிற்காததால், எச்சரிக்கை செய்ய துப்பாக்கியால் சுடப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது. இதனை தொடர்ந்து காயமடைந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இது குறித்து விசாரணை நடைருவருகிறது என இந்திய கடற்படை விளக்கமளித்துள்ளது.
