பயிற்சியின்போது விபரீதம்; தலையில் பலத்த அடி; மருத்துவமனையில் பாகிஸ்தான் வீரர்!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்திற்கு தலையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியையொட்டி இரு அணிகளின் வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த அணியின் வீரர் முகமது நவாஸ் அடித்த பந்து ஷான் மசூத்தின் தலையின் வலப்பக்கத்தில் வேகமாகப்பட்டது.

Masood

இதனால் கீழே விழுந்த அவர் வலியால் துடித்திருக்கிறார். உடனடியாக மசூத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

33 வயதான ஷான் மசூத் பாகிஸ்தானுக்காக டி20யில் 12 போட்டிகளில் விளையாடி உள்ளார். 125.00 ஸ்ட்ரைக்ரேட்டில் 220 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.