
நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்மிட்டிருப்பதாக ரஷ்யாமீது உக்ரைன் குற்றச்சாட்டு.

அர்ஜென்டினாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மிகப்பெரிய சுவர் ஓவியத்தை அவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ல் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்குக் கருவியால் படம் பிடிக்கப்பட்ட படைப்பின் தூண்கள்!

இங்கிலாந்தின் கடைசி கருஞ்சிறுத்தை எக்ஸ்மூர் பூங்காவில் உயிரிழந்தது.

2024 பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரின் சாம்ப்ஸ் எலிசீஸ் என்ற இடத்தில் நடக்கவிருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் .

சூடானில் உள்ளூர் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருள்களை சட்ட விரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில்… அவரை பொது பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.