
ஜார்க்கண்டில், ஆண் நண்பரை தாக்கி விட்டு ஐ.டி. நிறுவன பெண் ஊழியரை கடத்திச் சென்ற 10 பேர் கொண்ட கும்பல், அவரை மாறி மாறி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அந்த ஜோடியை 10 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. அதன்பின்னர், ஆண் நண்பரை தாக்கி விட்டு இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த கும்பல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தப்பியோடியது. அப்படி செல்லும்போது, இளம்பெண்ணிடம் இருந்த செல்போன் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதன்பின்னர், அந்தப் பெண் வீடு வந்து சேர்ந்துள்ளார்.
நடந்த சம்பவம் பற்றி குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என, எஸ்பி அஷுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார்.