ஜம்மு: காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பயங்கரவாத ஆதரவு அமைப்புகள் தடை செய்யப்பட்ட பின்னர் சில முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் இதன் ஆதரவு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பலர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டிமிடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் ஸ்ரீநகர், பாரமுல்லா, சோபியான் மாவட்டங்களில் மாநில புலனாய்வு படையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பின்னணியில் உள்ளவர்கள் வீடுகளில் இந்த ரெய்டு நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement