மும்பை : மும்பையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான அபேக்ஷா மேக்கர் என்பவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தை, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், வெகுவாக ‘டுவிட்டர்’ வாயிலாக பாராட்டி உள்ளார்.
“ தீபாவளி பண்டிகை ஏன் தீபங்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை இந்த புகைப்படம் வெகு அழகாக காட்டி விட்டது. மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்த இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அபேக்ஷா எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.இந்த படத்தை, அபேக்ஷா ‘ஆப்பிள்’ போன் வாயிலாக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement