காஷ்மீரில் திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமாக தண்ணீரில் தூக்கி வீசிய முஸ்லீம் நபர் கைது!

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கோஜ்வாடா பகுதியில் ஒரு நபர் திருக்குர்ஆனை தண்ணீரில் வீசினார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அகமது மிர், இரவோடு இரவாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் மனம் சமநிலையில் இல்லை என்று ஸ்ரீநகர் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக நவ்வட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லீம் மதத்தின் புனித நூலான திருக்குர்ஆனைப் புண்படுத்துவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. குர்ஆனின் புனிதத்தன்மை அவமதித்ததன் காரணமாக, மத நல்லிணக்கம் மற்றும் அமைதி சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளது. குரானை அவமதித்ததால் தான் பல இடங்களில் கலவரம் நடந்துள்ளது.

எனவே, திருக்குர்ஆனைப் புண்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இல்லை என்றால், இந்தச் சம்பவத்தின் போர்வையில் சமூக விரோதிகள் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அகமது மிர், இரவோடு இரவாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.