அக்டோபர் 30ஆம் தேதியான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் பகுதியில் நடக்கவுள்ள கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு மாவட்டத்தில் 30ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளும் பார்களும் நிச்சயம் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மதுபானத்தை கடத்துதல், சட்டவிரோதமாக மதுபானம் விற்றல், மது புட்டிகளை பதுக்கி வைத்தல் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டால் இந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.