வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட ‘ சிரிக்கும் சூரியன்’ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாசாவின் சமூக வலைதள பக்கத்தில் சூரியன் சிரிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் ஆகும். இரண்டு துளைகள் கண்கள் போலவும் காட்சியளிப்பதுடன் சிமிட்டுவது போன்று காட்சியளிக்கிறது. மூன்றாவது துறை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை குழியை உருவாக்கி உள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வட்டரி, சூரியன் ”சிரிப்பதை” படம் பிடித்துள்ளது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என அழைக்கப்படுகின்றன. அவை, வேகமான சூரியக்காற்று விண்வெளிக்கு வெளியேறும் பகுதிகளாகும் என விளக்கி உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் பல விதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement