டுவிட்டரை வாங்கியது ஏன்…? எலான் மஸ்க் விளக்கம்

வாஷிங்டன்

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார்.

இதையடுத்து, டுவிட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார்.

பின்னர் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இதையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-ந்தேதிக்குள் (நேற்று) ஒப்பந்தத்தை இறுதிசெய்ய கெடு விதித்தது.

இந்த சூழலில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் தலைமையகத்துக்குள் எலான் மஸ்க் நேற்று முன்தினம் நுழைந்தார். அப்போது அவர் கைக்கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒற்றை கையில் எடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோவையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்தார்.

பின்னர் அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறுது நேரம் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

டுவிட்டரின் உரிமையாளரான சில மணி நேரத்துக்குள்ளாக நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை எலான் மஸ்க் அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

உண்மையில் அதற்கு முன்னதாக டெஸ்லா உரிமையாளர் டுவிட்டர் விளம்பரதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலியாக பிளவுபடும் பெரும் ஆபத்தின் மத்தியில் ‘மனிதகுலத்திற்கு உதவும்’ முயற்சியில் டுவிட்டரை வாங்கியதாகக் கூறினார்.

அதன்பிறகு, டுவிட்டர் உரிமையாளராக அவர் எடுத்த முதல் முடிவுகள், தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் தலைமைச் சட்ட அதிகாரி விஜயா காடே ஆகியோரை நீக்கியது ஆகும்

இப்போது, ​​சட்ட வல்லுனர்கள் எலான் மஸ்கின் நிதிப் பொறுப்புகள், குறிப்பாக பணியாளர் இழப்பீடு மற்றும் வணிகத்திற்கான பணப்புழக்கத்தை பராமரிப்பது குறித்து கவலை தெரிவித்து உள்ளனர்.

டுவிட்டரின் தோராயமாக 7,500 பணியாளர்களுக்கு நிறுவனத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மஸ்க் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டும்.ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, மஸ்க் பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்திருக்கலாம் என கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள தவறு மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணத்தைப் பெறுவார்களா என்ற தெளிவின்மை நீண்ட வழக்குகளைத் போட தூண்டலாம்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.