மகேஷ் பாபு வீட்டில் திருட முயற்சி: சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more

பனாரஸ் டிரைலரை வெளியிட்ட அர்பாஸ் கான்

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி திலக்ராஜின் மகன் ஜெயித்கான் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்திருக்கும் படம் பனாரஸ். ஜெயதீரா இயக்கி உள்ளார். ஜெயித்கானுக்கு ஜோடியாக சோனல் மாண்டீரா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே துளு மற்றும் கன்னட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இசையுடன் காதல் கலந்த திரில்லர் படமாக ‛பனாரஸ்' உருவாகி உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பான் இந்தியா பிரஸ் மீட் நிகழ்ச்சி பெங்களூருவில் இரு … Read more

மக்களுக்கு அடுத்த இடி..!! ஆம்னி பேருந்துகளின் புதிய கட்டண பட்டியல் வெளியீடு..!!

பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.ஆனால் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்குய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போகிறது.. இதனால் பேருந்து பயணத்தை நாடுகின்றனர். அதிலும், குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது … Read more

“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” – அமைச்சர் பொன்முடி

சென்னை: ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவர்கள் 31 ஆயிரத்து … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, சசி தரூர், திரிபாதி மனு தாக்கல் – அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக். 17-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறினார். ஆனால், முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க மறுத்த விவகாரத்தால், போட்டியில் இருந்து விலகினார். திருவனந்தபுரம் எம்.பி. சசி … Read more

முப்படை தலைமை தளபதி பதவியேற்பு: சவால்களை சந்திக்க தயார் என சூளுரை

புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று பொறுப்பேற்ற  அனில் சவுகான், நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்தார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி, கடந்த 2019ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  இதன் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத்,   கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். பின்னர்,  கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், முப்படைகளின் … Read more

முப்படைகளின் தலைமை தளபதியாகஜெனரல் அனில் சவுஹான் பதவியேற்பு| Dinamalar

புதுடில்லி :முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் அனில் சவுஹான், 61, நேற்று பதவி யேற்றார். எதிர்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளை தயார் செய்வதே, தன் நோக்கமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.நம் நாட்டில் ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார். அணிவகுப்பு மரியாதை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் … Read more

புஷ்கர் பேச்சால் அதிர்ச்சியான ஹிருத்திக் ரோஷன்

தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த நிலையில் இந்த படம் இதே பெயரில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி உள்ளனர் இன்று (செப்-3௦) இந்த படம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி … Read more