`5 லட்சம் ஓட்டு பெருசா… 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ – பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்

சேலம், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இலவச சைக்கிளுக்காக 43 மாணவ-மாணவிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் திமுக மற்றும் … Read more

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கடந்த 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கொலுவை பொதுமக்கள் பார்வையிட முதன்முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (அக்.1) முதல் அக்.5-ம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை ஆளுநர்மாளிகையில் மக்கள் கொலுவை காணலாம். கொலுவை காண விருப்பமுள்ளவர்கள், பெயர், பாலினம், முகவரி, தொடர்பு … Read more

யூதர்கள், முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த பிஎஃப்ஐ சதி – தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ கடந்த மாத இறுதியில் 2 முறை சோதனை நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்தது. இவர்களிடம் தீவிரவாத சதி தொடர்பாக ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பணம் பெறப்பட்டு, வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. என்ஐஏ விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டர்கள் … Read more

அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சென்னை: அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இதையடுத்து அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

கடலூர்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவு வாங்கிய பாடகர்

மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங், ஏராளமான இந்தி படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் அவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் மிகாசிங் சொந்தமாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும். மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என மிகாவின் நெருங்கியவர்கள் தெரிவித்தனர். பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் … Read more

தேசிய விருதுகளை பெற்ற சூர்யா, அபர்ணா, ஜிவி பிரகாஷ், வசந்த் சாய், சுதா : ஜனாதிபதி வழங்கினார்

புதுடில்லி : 68வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் வழங்கப்பட்டன. சூர்யா, அபர்ணா பாலரமுரளி, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா, வசந்த் சாய், அஜய் தேவ்கன், நஞ்சம்மா உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் விருதுகளை பெற்றனர். ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. 68வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் வழங்கப்பட்டது. … Read more

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாக ஸ்ரீமதியின் தாய் ஆவேசம்..!!

கடந்த ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையில் வெடித்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என போராட்டத்தில் குதித்த பெற்றோரை அப்போதே நீதிமன்றம் கண்டித்தது. மகளின் உடலை வைத்துக் கொண்டு பந்தயம் கட்டுகிறீர்களா? என நீதிமன்றம் அப்போது கேள்வி எழுப்பியது. இதனிடையே மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நடந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்த திருமாவளவன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் … Read more

அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன – தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த … Read more