2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் 05 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இதன்படி, வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 238 ரூபாவாகவும், நெத்தலி ஒரு கிலோ கிராம் 1300 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 398 ரூபாவாகவும், டின் மீன் ஒன்றின் விலை 585 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளன.அத்துடன், ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும்.
அத்துடன், சதொச ஊடாக எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.