அதிவேகத்தில் வைரஸ்.. அரசு அதிரடி; பீதியில் உறைந்த மக்கள்!

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ‘புளூ காய்ச்சல்’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும், இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த காய்ச்சல் சுமார் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதிலிருந்து மீளலாம். குழந்தை பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது.

இந்த காய்ச்சல் ஏற்பட்டால் 2 முதல் 6 நாட்கள் வரை நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட அறிகுறி ஏற்படும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்குமே பாதிப்பு ஒரே மாதிரியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும், காய்ச்சல் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் சுயமாகவே சிகிச்சைகள் எடுத்து கொள்ளக்கூடாது என்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் பன்றி பண்ணைகளில் பன்றிகள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு ஒவ்வொன்றாக பலியாகி வந்துள்ளன.

இதையடுத்து கோட்டயம் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பெங்களூருவில் இருக்கும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடைபெற்ற சோதனையில் இறந்த பன்றிகளுக்கு ‘ஆப்பிரிக்க ப்ளூ காய்ச்சல்’ பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நோய் பாதித்த பன்றிகளை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோட்டயம் மாவட்டத்திற்குட்பட்ட ஆர்ப்புகரையில் 67 பன்றிகள், மூலக்குளத்தில் 33 பன்றிகள் என்று, மொத்தம் 181 பன்றிகள் பலியாகின. அவற்றை கால்நடை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் அழித்துள்ளனர்.

இதனை அடுத்து ‘ஆப்பிரிக்க ப்ளூ காய்ச்சல்’ நோய் பாதிப்பு மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க பன்றிகள் இறந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றி பண்ணைகளை கண்காணிக்கவும், நோய் பாதித்த விலங்குகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்திட மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் தீவிரமாக இறங்கி செய்து வருவதால் மக்கள் மத்தியில் பீதியும், பரபரப்பும் தொற்றிக்கொண்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.