வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: இந்தியர்கள் திறமைசாலிகள், முயற்சி செய்பவர்கள் எனக்கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வளர்ச்சியில் இந்தியா சிறப்பான இடத்தை அடையும் ஆற்றல் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கூறியுள்ளார்.

ரஷ்ய ஒற்றுமை தினம் (நவ.,4) முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சியில் புடின் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் திறமைசாலிகளாகவும், முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் இந்தியா சிறப்பான இடத்தை அடையும். வளர்ச்சி அடிப்படையில், இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பும், இடமும் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அங்கு உள்ள 130 கோடி மக்களும் நாட்டிற்கு ஆற்றலாக உள்ளனர்.

முன்னாள் காலனித்துவ நாடுகள், ஆப்ரிக்காவில் கொள்ளையடித்து வளர்ச்சி கண்டுள்ளன. இது அனைவருக்கும் தெரியும். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இதனை மறுக்க மாட்டார்கள். அவர்களும், ஆப்ரிக்க மக்களின் துன்பம் மற்றும் துயரத்தில் தான் காலனித்துவ நாடுகள் கட்டமைக்கப்பட்டன என்கின்றனர்.
இது முழுமையாக இல்லாவிட்டாலும் அதன் கணிசமான வளர்ச்சிக்கு கொள்ளை, அடிமை வர்த்தகம் தான் காரணம் என்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறு புடின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement