நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து ஆங்காங்கே வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது என்றும் நவம்பர் 9க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in