குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்…!

காந்தி நகர்:  குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில், வெறும் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சூ நதியின் குறுக்கே உள்ள நூறாண்டை கடந்த தொங்குபாலம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க திகழ்கிறது. சுமார்  233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் மீது சுற்றுலா பயணிகள் நடந்துசென்று புளங்காகிதம் அடைவர். இந்த பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த 7 மாதங் களாக மூடப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிக்கா கமாநில பாஜக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியதாக அறிவித்தது.

இந்த பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஒரேவா குழுத்தின் அஜந்தா மேனுஃபேக்சரிங் நிறுவனம்  15 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான ஒப்பந்தமும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பாலத்தின் பழுது பார்க்கும்பணி,  8 முதல் 12 மாதங்கள் என கூறப்பட்டுள்ள நிலையில் 5 மாதத்திலேயே,  பணிகளை முடிந்துவிட்டு, மாநில நாளான கடந்த அக்டோபர்  26-ம் தேதி பாலம் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த நிலையில்தான்  அக்டோபர் 30-ம் தேதி பாலம் மீது சுமார் 500 பேர் வரை ஏறிய நிலையில், அந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 142 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சத்தை மட்டுமே அந்த நிறுவனம் செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.