தென்அமெரிக்க நாடான சிலியின் சான்டியகோ பகுதியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, பறந்து வந்த ஒரு கிளி அவரது தோள்பட்டையில் அமர்ந்தது. அந்த நிருபரோ, பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் என்ற சொல்லும் போதே அந்த கிளி நிருபரின் காதில் மாட்டியிருந்த இயர்பேடை கவ்விக் கொண்டு பறந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அந்த கிளியை பிடிக்க முயற்சித்த போது கிளியோ இயர்பேடோடு பறந்து சென்றது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.