
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நடப்பு சாம்பியனும், போட்டியை நடத்தும் அணியுமான ஆஸ்திரேலியா வெளியேறியது.
சூப்பர்12 சுற்றில் இலங்கை – இங்கிலாந்து இடையே போட்டி நடைபெற்றது. குரூப் 1இல் நியூசிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சமமான புள்ளிக்கணக்கில் இருந்தன.
இந்நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி குரூப் 1இல் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் முதல் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

142 என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் ஹசரங்கா சுழலில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது.

ஆனாலும் பொறுப்புடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
newstm.in