விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியிருக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே..ரஞ்சிதமே’ பாடல் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ரியாக்ட் செய்துள்ளனர். விஜய் பாடியிருக்கும் இந்த பாடல் செம குத்து பாடலாக இருப்பதால், பொங்கலன்று தியேட்டர் கிழியப்போகுது என தெரிவித்துள்ளனர். பாடலை ரசித்து ரசித்து இசையமைப்பாளர் தமன் உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் விஜய் ரசிகர்கள், சாதாரணமாகவே பாடலுக்கு குத்தாட்டம் போடும் பேன்ஸ், விஜய் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு தியேட்டரை அதிர வைப்பார்கள் என பையர் விட்டுள்ளனர்.
— மாதேஷ் November 5, 2022
ஆனால், விஜய் ஹேட்டர்ஸ் இல்லாமலா இருப்பார்கள்?. வழக்கம்போல் விஜய் பாடியிருக்கும் இந்த பாடலை கிண்டலடித்தும், கேலி செய்தும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒருசிலர் தெரிவிக்க, இன்னும் சிலர் எந்த பாடலின் காபி என்கிற அளவுக்கு டீட்டெய்லாக ரிசேர்ச் செய்துவிட்டனர்.
Dei ithu mocha kotta pallazhagi song da November 5, 2022
ரஞ்சிதமே பாடல், ஆல்டைம் ஹிட் லிஸ்டில் இருக்கும் ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலின் காபி வெர்சன் என தெரிவித்துள்ளனர். அந்த பாடலின் வரிகளையும், ட்யூனையும் லைட்டா அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களின் ரியாக்ஷனால் டிவிட்டரில் ஒரு களேபரமே நடந்து கொண்டிருக்கிறது. இதனால், டிவிட்டரில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஹேஸ்டேக் இந்தியளவில் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது. பாடல் வெளியான சில மணி துளிகளில் ஒரு மில்லியன் வியூஸ் ஹிட்டடித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கி இருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் விஜய்யின் முதல் படம் என்ற சிறப்பையும் வாரிசு பெற்றிருக்கிறது. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி திரைநட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.