பெங்களூரு :கர்நாடகாவில், தனியார் துவக்கப் பள்ளியில் 9 வயது மாணவி, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரில் உள்ள கங்கம்மாகுடி என்ற இடத்தில் தனியார் துவக்கப் பள்ளி உள்ளது.
இங்கு, நான்காம் வகுப்பு ஆசிரியர், வீட்டுப்பாடம் எழுதாத மாணவ – மாணவியருக்கு தண்டனை அளித்துள்ளார். அவர்களை வெளியே நிற்க வைத்து, வரிசையாக கன்னத்தில் அறைந்து உள்ளார்.
இதில், நிஷிதா என்ற 9 வயது மாணவி, திடீரென சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.
உடனே ஆசிரியர்கள், அம்மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிஷிதாவின் தந்தை உடனே ஆசிரியர் மீது புகார் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement