அதிகாரத்தின் கைக்கூலியாக கவர்னர்கள் இருக்கக்கூடாது… தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பப்பெறும் முடிவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்! என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில், “தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

அதற்கு எதிர்வினையாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் ” சிலந்திகளால் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும் என முரசொலி கட்டுரைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில், தமிழிசையின் கருத்தை விமர்சித்து பேசியுள்ள தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது; சமூகத்தில் மூட்டை பூச்சியாக ,சிலந்தியாக ,கரப்பானாக செயல்பட்டு ஏற்ற தாழ்வு கொண்ட சமூகமாக உருவாக்கியவர்களை திமுக என்னும் பூச்சிக்கொல்லி தான் அழித்து ஒழித்து சமூகத்தில் சம தர்மம் , சமூக நீதி எல்லாவற்றையும் கொண்டு வந்தது அப்படி வந்ததால் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்த தமிழிசை இன்று கவர்னராக இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு அவர் பேசி வருகிறார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் சனாதன வாதிகளின் வெற்றி என்பது அவர்களால் சூத்திர பட்டம் சாட்டப்பட்ட மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அநீதி தான். தமிழிசை எங்கிருந்து பேசுகிறார் எதற்காக பேசுகிறார் என்பது தெரியவில்லை. பேசும் இடத்தில் அவர்களை வைத்த இந்த சமூக நீதி கோட்பாட்டு அரசியலை பற்றி பேசுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அவர் வேண்டுமென்றே பேசுகிறாரா அல்லது பேசுவதற்காக நிர்பந்திக்கப்படுகிராறா, பதவி மீது அதீத ஆசை காரணமாக பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.

சிலர் பதவி மோகதிற்காக எதை வேண்டுமாாலும் செய்ய துணிந்து விட்டார்கள். அதிகாரத்தின் கைக்கூலியாக அமர்ந்து விட்டு எதை எதையே பேசி குழப்பத்தை ஏற்படுத்த கூடாது குறிப்பாக கவர்னர்கள் இதனை செய்ய கூடாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.