அந்தம்மா மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதென்னுதான்… செமயாய் சமாளித்த அண்ணாமலை!

சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மேற்கு வ:ங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘இல.கணேசன் பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவர்; தமது இல்ல விழாவுக்கு வரும்படி தொலைபேசியில் அன்போடு அழைப்பு விடுத்திருந்தார். நானும் வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் அந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டிருந்தார்.

அவர் பங்கு பெறும் எந்த நிகழ்வில் கலந்து கொள்ளகூடாது என்ற எண்ணத்தில் நான் திடமாக இருப்பதால்கான் இல,.கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதே நான் இந்த முடிவுக்கு வர காரணம். இல. கணேசனை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவேன். அவருக்கு எப்போதும் என் மீது தனிப்பட்ட பாசம் உண்டு’ என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தே கலவரத்தை தூண்டுவதற்காகதான் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, ‘ அவ்வபோது கட்சி மாறும் சேகர் பாபு போன்றவர்கள் தாம் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டி சில கருத்துக்களை சொல்கின்றனர். கட்சி மாறாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி.

காற்றுக்கு வருகின்ற பட்டத்தை போல் கட்சி மாறும் சேகர் பாபு, அதிமுகவில் இருந்தபோது திமுகவை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்று நெஞ்சை தொட்டு சொல்லட்டும் பார்ப்போம். இன்று அவர் திமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இப்படி பேசுகிறார். வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததே ஆர்எஸ்எஸ் தான். இதை புரியாதவர்கள் ஆர்எஸ்எஸ் மீது அபாண்ட பொய் சொல்கிறார்கள். சேகர் பாபு சாப்பிடுகிற வீட்டுக்கு விசுவாசம் ஆக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். எனவே அவர் சொல்வதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று இன்று கூறப்படுவதற்கு முக்கிய காரணமே பாஜக தான். சிலிண்டர் வெடி விபத்து என்று கூறி அந்த தாக்குதலை மறைக்க நினைத்த திமுக அரசை, அதனை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பாஜகவிற்கு 10 நாட்கள் தேவைப்பட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.