பெங்களூரூ,’டொயோட்டா’ நிறுவனம், அதன் புதிய ‘இனோவா ஹைகிராஸ்’ எம்.பி.வி., காரை, நவம்பர் 25ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த காருக்கான அறிமுக டீசரை, இந் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
அதில், காரின் முன்பாகம் மட்டும் காட்டப்பட்டிருந்தது.
உலகளவில் விற்பனையில் இருக்கும் ‘கொரோலா கிராஸ்’ எஸ்.யு.வி., காரில் இருப்பதைப் போன்ற ஹெக்ஸகனல் க்ரில், இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது, காரின் பிரமாண்ட உருவத்தை பதிவு செய்கிறது.
இந்த கார், டொயோட்டாவின் பிரத்யேக டி.என்.ஜி.ஏ., – சி., உருவாக்கு தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உட்பட, வலுவான ஹைபிரிட் வகையிலும் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement