அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிதிக் கொள்கையின் அடிப்படையில் கட்டம், கட்டமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் குறைவடைவதால் மாத்திரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்கமுடியும் என்று தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதத்தில் 69.8 வீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 66 வீதமாக காணப்படுகிறது. இதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை உடனடியாக குறைவடையுமென குறிப்பிடமுடியாது.
எவ்வாறெனினும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நிதிக்கொள்கையின் பிரகாரம், படிப்படியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதே எதிர்பார்ப்பாகும் என்றும் கூறினார்.