டான்சானியா: ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான செய்தி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள், மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது உறுதியானது. புக்கோபா விமானநிலையத்தின் ரன் வேயின் ஒரு பகுதி விக்டோரியா ஏரியை ஒட்டி அமைந்துள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் புக்கோபாவில் இருந்து டான்சானியாவின் பெரிய நகரமான தஸ் எஸ் சலாமிற்கு கிளம்பியது. ஆனால் புயல், மழைக்கு இடையே விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.