சென்னையில் இருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.
இந்நிலையில் நேற்று இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இரவு 11 மணியளவில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்றபோது திடீரென பயங்க சத்தத்துடன் பெட்டிகள் துண்டிக்கப்பட்டன.
எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்தது. S8 பெட்டிக்கு பிறகு இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேநேரம் ரயில் என்ஜினுடன் சேர்ந்த பெட்டிகள் தனியாக சென்றன.
இதனை கவனித்த ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியதால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தனியாக ஓடிய பெட்டிகளும் சிறிதுதூரம் ஓடி பின்னர் வேகம் குறைந்து நின்றன.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். அதன்பின்னர் ரயில் தாமதமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது.
newstm.in