இலங்கைக்கான தென் கொரிய உயர்ஸ்தானிகர் சென்தூஸ் வூன்ஜின் ஜெஒன்ங் விஜயம் உடத்தலவின்னவுக்கு விஜயம் செய்துள்ளார்.
தென்கொரியாவில் கடந்த மாதம் 29 அம் திகதி இடம்பெற்ற சன நெருசல் சம்பத்தில் உயிரிழந்த உடத்தலவின்ன வாலிபரின் இல்லத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக உயர்ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
தென் கொரிய நெருசல் சம்பவத்தில் உயிரிழந்த 160 பேர்களில் இலங்கையைச் சேர்ந்த கண்டி மாவட்டத்தின் உடத்தலவின்ன 27 வயதுடைய முஹமட் ஜினத் எனபவர் உயிரிழந்தார்.
துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினரின் இல்லத்திற்கு விஜயம் செய்த இலங்கை தென் கொரிய உயர்ஸ்தானிகர் , உயிரிழந்த இளைஞரின் தந்தை, சகோதரர் மற்றும் மனைவின் தந்தை ஆகியோர்களைச் சந்தித்து தன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தென் கொரிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
யட்டி நுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தாருடன் இலங்கை தென் கொரிய உயர்ஸ்தானிகர் ஆகிய இருவருக்கிடையிலான பரஸ்பரம் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது உயர் ஸ்தானிகர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
இவ்விளைஞரது ஜனாஸா நல்லடக்கம் 02-11-2022 வியாழக்கிழமை உடத்தலவின்ன ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டு உடத்தலவின்ன மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.