டெல்லி: தற்போது நாட்டு மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் அச்சிடப்பட்ட பணத்திலிருந்து வங்கியிடம் உள்ள தொகையை கழித்தால் மக்களிடம் உள்ள தொகை தெரியவரும். 2016, நவ.4-ல் நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பொதுமக்களிடம் இருந்தது. 2016 நவ.8-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கைகளில் இருந்த ரொக்கப்பண மதிப்பு 2017 ஜனவரியில் ரூ.7.8 லட்சம் கோடியாக சரிந்தது. புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதும் மக்கள் கையில் உள்ள ரொக்கப்பணத்தின் அளவு அதிகரித்தது.
