
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) காலியாக உள்ள 119 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Assistant
பணியிடங்கள்: 119
வயதுவரம்பு: 9.11.2022 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.iitk.ac.in/infocell//recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 9-11-2022
மேலும் விவரங்கள் அறிய https://www.iitk.ac.in/new/data/recruitment/Advt_No_1_2022/Advt-No-1-2022-10-10-22.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.