பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். ஆலியா பட் கர்ப்பமாகி, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
அவருடன் கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஆலியா பட், எங்கள் குழந்தை, விரைவில் வரவிருக்கிறது என்று ஜுன் மாதம் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஆலியா பட் – ரன்பீர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராக எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in