மலோபா, மத்திய ஆப்ரிக்கா நாடான எக்குவடோரியல் கினியில், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர்கள், 16 பேரை, அந்த நாட்டு கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேக்கு சொந்தமான சரக்கு கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர் உட்பட, 26 பேர் சென்றனர். இந்த கப்பல் எண்ணெய் ஏற்றிச் சென்றது.
சர்வதேச கடல் எல்லையில் சென்ற இந்த கப்பலை, எக்குவடோரியல் கினி நாட்டைச் சேர்ந்த கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இந்த சரக்கு கப்பல் அத்துமீறி தங்கள் கடல் எல்லைக்குள் வந்ததாகவும், இந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப் போவதாகவும், அந்த நாட்டின் கடற்படையினர் அறிவித்தனர்.
கடந்த ஆகஸ்டிலேயே இந்த சம்பவம் நடந்தாலும், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர்கள், 16 பேரும் தற்போது தான், இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், தங்களை விடுவிக்கும்படி அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் நேற்று புதுடில்லியில் இந்திய அதிகாரிகளை சந்தித்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
தற்போது அந்த கப்பல், எக்குவடோரியல் கினியின் லுபோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறியதாவது:இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்து. இந்தியர்களை விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement