
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வருகிற 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அன்று காலை 10 .30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.