
ரூ.100 கோடி வசூலித்த சர்தார்: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. கார்த்தியுடன் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். கார்த்தி, தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாபியாவுக்கும் உளவாளிக்கும் இடையிலான மோதலை சொன்னது. படம் பற்றி கலவையான விமர்சனம் இருந்ததாலும் வசூலில் சாதனை படைத்தது. உடன் வெளியான பிரின்ஸ் படத்தின் தோல்வி சர்தாருக்கு சாதகமாக அமைந்தது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாவ அறிவித்திருக்கிறது.
சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதும், தயாரிப்பாளர் இயக்குனர் மித்ரனுக்கு சொகுசு கார் பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.