கியோன்ஜார் :ஒடிசாவில், வனப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் குடித்த ௨௪ யானைகள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ‘வீடியோ’ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
ஒடிசாவில், கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபடா முந்திரி காட்டுக்கு அருகே வசிக்கும் கிராமத்தினர் சிலர், மஹுவா என்ற போதை தரும் மலர்களை வைத்து கள்ளச்சாராயம் தயாரிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு, ஏற்கனவே அந்த மலர்களை பெரிய பானைகளில் தண்ணீரில் ஊறவைத்து, நொதிக்க வைத்திருந்தனர்.
பதப்படுத்தப்படாத அந்த தண்ணீரை காய்ச்சி, சாராயம் தயாரிக்கச் சென்றபோது, பானைகள் உடைந்து சேதப்படுத்தப்பட்டிருந்தன; நொதிக்க வைத்திருந்த தண்ணீரையும் காணவில்லை.
அப்போது, அப்பகுதியில் 24 யானைகள் குறட்டை விட்டு அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தன.
இதைக் கண்ட கிராமத்தினர், யானைகள் அரைகுறையாக தயாரிக்கப்பட்டிருந்த சரக்கை குடித்துவிட்டு உறங்குகின்றன என புரிந்துகொண்டனர்.
அங்கு வந்த வனத்துறையினர், மேளங்களை அடித்து யானைகளை எழுப்பினர். பின், யானைக் கூட்டம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டன. இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement