வரலாற்றில் முதற் தடவையாக குச்சவெளி பிரதேசத்தில் 10இற்கும் அதிகமான நிலப்பிரதேசம் நெல் விவசாயம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் சுமித் கொடின்கடுவ தெரிவித்தார்.
பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு, நாட்டின் தற்போதைய சிக்கல் நிலைமைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அரசின் இலக்குகளுக்கு இணங்க இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலைக் குச்சவெளிப் பிரதேசத்தில் இயற்கை விவசாயத்தை (Organic farming) முன்னேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கொள்ளும் விவசாயத்தை வெற்றிகரமாக மாற்றுவதுடன், எதிர்காலத்தில் மேலும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விபரித்தார்.