தினமலர்- பட்டம் இதழ் மாணவர்களிடம் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் புகழாரம்| Dinamalar

‘தினமலர் -பட்டம் இதழ்’, மாணவர்கள் மத்தியில் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசினார்.

‘தினமலர்’ நாளிதழின், மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் நேற்று நடந்த ‘பதில் சொல் அமெரிக்கா செல்’ வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘தினமலர்’ பட்டம் நாளிதழ் பள்ளி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களின் உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் நல்ல செய்திகளை விதைத்துக் கொண்டுள்ளது. உலக செய்தி, அறிவியல், விளையாட்டு செய்தி பற்றி பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் விளக்கங்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அறிவியல் ஆர்வத்தை துாண்டியுள்ளது.

பட்டம் இதழை படித்து, அறிவியல் தொடர்பாக அதிகம் தெரிந்து கொண்டுள்ளனர். மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்திட இந்த வினாடி வினா நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக தினமலர் நாளிதழ் நிர்வாகிகளுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக பட்டம் நாளிதழ் வினாடி வினா நிகழ்ச்சி நடந்த போது நமது மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று முதல் பரிசை பெற்றனர்.

அந்த நிகழ்ச்சிக்காக நான் சென்னை சென்றிருந்தபோது, இந்த வினாடி வினா நிகழ்ச்சி தமிழக மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்டு மெய் சிலிர்த்து நின்றேன். இந்த பட்டம் இதழ் மூலமாக, மாணவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.