ஜனாதிபதி குறித்து சர்ச்சை கருத்து : வைரலான வீடியோ – சொந்த அமைச்சருக்கே திரிணாமூல் கண்டனம்

திரிணாமூல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது நந்திகிராமத்தில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் பேரணியை தாக்கி பேசும்போது, அகில் கிரி அந்த குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார். 

சுவேந்து அதிகாரி, அகில் கிரி குறித்து பேரணியின் போது பேசியதற்கு, அகில் பதில் அளித்தார். அப்போது அகில் கூறியதாவது,”நாந் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். நீங்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறீர்கள். நாம் எப்போதும், ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை எடைப்போடக்கூடாது. இந்திய ஜனாதிபதி இருக்கிறார், அவரை நாம் மதிக்கிறோம். ஆனால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்?. 

சுவேந்து, என்னை அரை-பேண்ட் அமைச்சர் (Half-pant Minister) என்று அழைக்கிறார். நான் அரை-பேண்ட் அமைச்சர் என்றால், அப்போது உங்கள் தந்தை யார், அண்டர்வேர் அமைச்சரா?(Underwear Minister). எனது துறையில் எனக்கு மேலான அமைச்சர் யாரும் இல்லை. ஆனால், உங்கள் தந்தைக்கு இருந்தது. அரை-பேண்ட்டுக்கு உள்ளே எல்லோரும் என்ன அணிவார்கள். அதேதான், உங்கள் தந்தை அண்டர்வியர் அமைச்சர்தான். 

தன்னை தொடக்கூடாது என சுவேந்து பெண் ஒருவரிடம் கூறுகிறார். அந்த பெண் அவரை தொட்டால் என்னாகிவிடும்?  காவல்துறை வந்து தன்னை கைதுசெய்வதற்காக சுவேந்து காத்துக்கொண்டிருக்கிறார், அவர்தான் போலீசாரிடம் தன்னை கைதுசெய்யும்படியும் கூறினார். அப்படியிருக்கையில், ஒரு பெண் போலீசாரிடம் ‘என்னை தொடதே’ என அவர் எவ்விதத்தில் நியாயம்” என்றார். 

அமைச்சர் அகில் கிரியின் குடியரசுத் தலைவர் குறித்தான கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சரின் இந்த  கருத்துக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து, பழங்குடிக்கு எதிரானவர் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சாடியுள்ளனர். தொடர்ந்து, அகில் கிரி பேசும் வீடியோவையும் மேற்கு வங்க பாஜக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் அமித் மால்வியா, அமைச்சரின் பேச்சு மிகவும் அவமானகரமானது என சாடியுள்ளார். தொடர்ந்து, அவர் தனது ட்விட்டில்,”அகில் கிரி, மம்தாவின் அமைச்சரவையில் இருப்பவர், நமது குடியரசுத்தலைவரை பார்த்து,’தோற்றத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. 

ஆனால் உங்கள் ஜனாதிபதி எப்படி இருக்கிறார்’ என கேட்கிறார். இதேபோன்று, மம்தா பானர்ஜியும் பழங்குடிகளுக்கு எதிரானவர்தான். முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலில், முர்முவை ஆதரிக்காதது மற்றும் தற்போது இது. மிகவும் அவமானகரமானது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், தனது பேச்சுக்கு அமைச்சர் அகில் கிரி மன்னிப்பு தெரிவித்த நிலையில், அவரை பேச்சை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக சாடியுள்ளது. அமைச்சரின் அந்த கருத்து பொறப்பற்றத்தன்மையில் உள்ளது எனவும், அது திரிணாமூலின் கருத்தில்லை எனவும் குடியரசுத் தலைவர் முர்மு மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

குடியரசுத் தலைவர் முர்மு குறித்து எதிர்க்கட்சிகள் இதுபோன்ற சர்ச்சை கருத்தைகளை தெரிவிப்பது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜூலை மாதத்தில், காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்ன் சௌத்ரி, முர்மு குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து, மற்றொரு காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான உதித் ராஜ் என்பவரும் கடந்த மாதம் முர்மு குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட இருவரும் பின்னர் தங்களின் பேச்சுக்கு மன்னிப்புக்கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.