தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என அமைச்சர் பொன்முன் தெரிவித்து உள்ளார். பேராசிரியர் பணி நியமனங் களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், மாணவர் சேர்க்கை ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொறியியல் மாணவர் சேர்க்கையில்  கடந்த ஆண்டை விட 10000 மாணவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். அதேபோல், பிளஸ் 2 துணை தேர்வு முடிகள் தற்போது வெளியாகி உள்ளதால், 18 நவம்பர் வரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.

எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டிருக்கிறது அரசு. பி. எச்.டி.படிப்பு 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் துவங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநில கல்லூரியில் செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசால் அறிவிக்கப்பட்டு காட்டபட்டாமல் விடப்பட்ட 13 கல்லூரிகளில் 8 கல்லூரிகளுக்கான கட்டிடப்பணி துவங்கப்பட்டு உள்ளது. அதேபோல் திமுக அரசு அறிவித்த 20 கல்லூரிகளில் 9 கல்லூரிக்களுக்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. புதிய கல்லூரிகள் உருவாவதால் காலி இடங்கள் இருப்பதால் ,1895 காலியிடங்களுக்கான கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முக தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

Ews ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  இடபிள்யுஎஸ் இடஒதுக்கிடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. அதனால், இப்போது நியமனம் செய்யும் பணிகளில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என்றார்.

மேலும் வேலூர் சிஎம்சி கல்லூரி ராக்கிங் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16ம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.