சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச் செம்மல்கள் என்ற வீர வரலாறு நம் பொது வாழ்வுக்கு உண்டு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
