புறப்பட்ட புது ஊழல்.. எடப்பாடி பீதி; அமைச்சர் வேலு அதிர்ச்சி தகவல்கள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

வடசென்னை மட்டுமல்லாமல் எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தபடி உள்ளது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே வங்கக்கடலில் வருகிற 17ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதனால் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் ஏ.வே.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சைதாப்பேட்டை பஜார் சாலையில் பகல் நேரங்களில் அதிகமான அளவு போக்குவரத்து நெரிசல் இருப்பதால் இரவு நேரங்களில் 2 நாட்களில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை வரையிலும் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.

சென்னையில் மழைநீர் அதிகமாக எங்கும் தேங்கவில்லை. ஆனாலும் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணியை 20 நாட்களுக்குள் முடிக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. தற்பொழுது அண்ணா சாலையில் சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை.

கடந்த ஆட்சியில் சரியான முறையில் நிதி ஒதுக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரே ஒப்பந்ததாரருக்கு பல பணிகளை கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி மட்டுமே வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எனவே ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்பொழுது பணிகளில் தொய்வு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து பணியை முடுக்கி விட்டு உள்ளோம். மழைநீர் வடிகால் பணி நடந்து வரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பிறகு, அந்த சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அதிமுக ஆட்சியில் அரங்கேறிய புதிய ஊழல் குறித்து, அமைச்சர் தற்போது வெளியிட்டு உள்ள தகவல் எடப்பாடி பழனிசாமியை கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.