ஓவர் டோஸான பாலியல் மாத்திரை.. கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை.. அதிர வைக்கும் உ.பி சம்பவம்!

பாலியல் மாத்திரை உட்கொண்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் கல்லூரி மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த ராஜ் கவுதம் (25) என்ற வாலிபர் வீட்டினுள் நுழைந்து கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றுவதற்கு முன்னதாக ராஜ் கவுதம் பாலியல் ஊக்க மாத்திரை உட்கொண்டுள்ளார்.
இதனால் கல்லூரி மாணவியின் பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும் வரையில் முரட்டுத்தனமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதிக ரத்தப்போக்கால் கல்லூரி மாணவி மயக்கமடையவே, அவரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளார் ராஜ் கவுதம். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த மாணவியின் சகோதரி வீட்டில் வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த உறவினர்கள் கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமையின் போது பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜ் கவுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.