சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு அக்ஷிதா என்ற 5 வயது உள்ளார். இந்த நிலையில் சிறுமி நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமி காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி வாய்க்கால் வாய்க்கால் ஓரத்தில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.