கோல்கட்டா: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். நீங்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறீர்கள். நாம் எப்போதும், ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது. இந்திய ஜனாதிபதி இருக்கிறார். அவரை நாம் மதிக்கிறோம். ஆனால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று மே.வங்க அமைச்சர் கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியவதாவது: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் திரிணமுல் காங்., எதிராக சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தவறு இழைத்தவர்களைத் தண்டிக்க சட்டம் தன் கடமையைச் செய்யும். ஆனால் ஊடகம் விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறது. வங்காளம் சொந்தக் காலில் நிற்கும் திறன் கொண்டது. எங்கள் சுயமரியாதை எங்களுக்கு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement