மாலி : மாலத்தீவில், சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், அடையாளம் காணப்படாமல் இருந்த ஒருவரது உடல், நேற்று அடையாளம் காணப்பட்டது. அவர் இந்தியர் எனத் தெரியவந்துள்ளது.
தெற்கு ஆசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலியில் நிருபெஹி என்ற இடத்தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதி உள்ளது. இதன் தரைத் தளத்தில், வாகனங்களை பழுது நீக்கும் ஒர்க் ஷாப் இருந்தது.
கடந்த 10ம் தேதி இரவு இந்த ஒர்க் ஷாப்பில் இருந்து தீப்பிடித்து, முதல் தளம் வரை பரவியது. இதில், துாங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இந்தியர்களில் மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என ஏழு பேர் பலியாகினர். இறந்தவர்கள் எந்த நாட்டினர் என்பது குறித்து அடையாளம் காண, அந்தந்த நாட்டு துாதரகங்களில் அடையாளங்கள் பகிரப்பட்டன.
இதன்படி, இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்த ஒருவரது உடல், நேற்று அடையாளம் காணப்பட்டது. அது இந்தியர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த விபத்தில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement